×

245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை

 

கோவை, ஆக.13: கோவை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஷேசயர் தன்னார்வ அமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடத்தியது. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட 245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் கிராந்தி குமார் பாடி வழங்கினார்.

அதன்பின் அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெற்றோருடன் கலந்து கொள்ளவும், வேலை வாய்ப்பு முகாமுடன் இணைந்து சுயதொழில் புரிபவர்களுக்கான மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்க தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், 37க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாமில் 483 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.  இதில், தேர்வு செய்யப்பட்ட 245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 245 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore District Administration Disabled Persons Welfare Office ,District Employment Office ,Cheshire Voluntary ,Dinakaran ,
× RELATED கோவை மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை